அந்த நாளில் தமிழில் விஞ்ஞானம் எழுதுவதோ படிப்பதோ அவ்வளவாக சரியாக இருக்காது! Mixing pot or vessal ஐ கறைப்பான் என்று மொழிபெயர்ப்பர். கரப்பான் பூச்சி என்று படிப்பது போல் கர்ணகடூரமாக இருக்கும். இப்போது நல்ல முன்னேற்றம்! url ஐ உரலி என்கிறார்கள். மற்றும் கணினி, மேல் ஏத்தி, அலை பேசி, எல்லாம் தமிழ் மொழிக்கு ஏற்றவாறு காதுக்கு பாந்தமாக இருக்கின்றன.
ஆயினும் சில வார்த்தைகளில் மட்டும் ஏனோ முரண்பாடு உள்ளது! ஒலி வடிவத்தில் அவை தமிழுக்கு இசைவாகவே இல்லை. தமிழ் வார்த்தைகள் முக்கால்வாசி காதுக்கு இனிமையாகவே இருக்கும்!சில நேரஙகளில் மட்டுமே அவற்றில் பொருளுக்கு ஏற்ப கடூரம் ஏற்றப்படும். அந்த காலத்தில் போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் போது கடூரம் சேர்த்தனர். ஆனால் இப்போது?
மனிதத்தன்மையை 'மனிதம்' என்று எழுதும்போது எழுத்தில் தமிழாக இருந்தாலும், அது ஒலியில் தமிழை இழக்கிறது.
அவ்வாறே, புரிவது என்று அழகாக இருக்கும்போது ஏன் 'புரிதல்' என்று எழுதுகிறோம்?
இப்போது hardware என்ற சொல்லுக்கு வன்பொருள் என்று மொழிப்பெயர்க்கிறோம். ஆயுதத்த்ற்கு வேண்டுமானால் வன்பொருள் என்று சொல்லலாம், மண்வெட்டிக்கும், ஆணிக்கும் கூடவா?
இதுபோல சில வார்த்தைகள் தமிழின் ஓசை நயத்திற்கு ஏற்றவாறு இல்லை! எங்கேயோ ம்ற்ற மொழிகளின் ஒலி தாக்கம் ஏற்படுகிறது.
என்னுடன் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் என்ன அழகாக தமிழ் பேசுகின்றனர்! மைக்கேல் என்னும் கல்தச்சர் 'பலகணி' என்று கூறும்போதே காதில் சங்கீதமாக ஒலிக்கும்! அவ்வாறே சன்னல் என்று அழகாக இசைப்பார்!! மற்றும் பலர், sponge ஐ 'பாஞ்சு' என்று அழகாக கேட்பர். cement சிமெட்டி ஆகிவிடும். மெக்கானிக்குகள் countersink ஐ அழகாக 'கொய்வார்' என்று கூறுவர்.சாதா மக்களோ என்ன அழகாக புரியும்படி தமிழாக்குவர் தெரியுமா? ECG சுருள் போட்டோவாகிவிடும். Endoscopy 'குழா விட்டு பாப்பாங்க' ஆகி விடும்! பொருள் பளீரென புரியும், அதே சமயம், சொல் காதில் தமிழ்தேனாக பாயும்! இதெல்லாம், மதறாஸ் பாஷை பேசுகிறார்கள் என்று கேலி செய்கிறோமே, அதே தமிழ் மக்கள்தான் பேசுகிறார்கள். படிப்பறிவு இல்லாவிட்டாலும் அவர்கள் பேச்சில் ஓசை நயம் குறையாது.
அவர்கள் ஆங்கில சொற்களை அப்படி அப்படியே பேசும்போதும், தமிழ் ஒலி நயத்தை கொண்டுவந்துவிடுவர். போலிஸ், கார், பஸ், பென்சில் மாதிரி வார்த்தைகள் எல்லாம் தமிழ் வார்த்தை மாதிரி, தமிழ் ஒலியிலேயே பேசப்படுகின்றன. வழக்கத்தில் புகுந்து விட்ட, கலந்து பேச்சாகிவிட்ட ஆங்கில வார்த்தைகளையும் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கவெண்டுமா? இதில் நான் என் கருத்தை தெரிவிக்கவில்லை. சாதா மக்கள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும், சொல்ல தெரியாவிட்டாலும் அவர்கள் மனதில் அவர்களுக்கே தெரியாமல் ஊறியிருக்கும் எண்ணங்களையே வெளிப்படுத்துகிறேன்.
பொருள் தெரியப்படுத்துதலிலும் சில சொற்கள் அவ்வளவு சரியாக படுவதில்லை! Lift or elevator க்கு மேல் ஏத்தி என்கிறோம். ஆனால், அந்த சொல்லில் Lift or elevator என்ற சொல்லின் அர்த்தத்தில் உள்ள வீரியம் இல்லை. மேல் ஏற்றி என்றால் பரவாயில்லை. மேலேற்றி என்று சேர்த்து கூறும்போது வீரியம் வெளிப்படுகிறது
No comments:
Post a Comment