Text both in
Tamil and English
சக்தி இல்லையேல் சிவன் இல்லை - சிவன் இல்லையேல் சக்தி
இல்லை, என்று
திருவிளையாடல் சினிமாவில் சக்தியும் சிவனும் சண்டை போட்டுக்கொள்வார்கள். இது
எப்படி சாத்தியம்? சிவம்
என்றால் ஒன்றும் இல்லாத எல்லை இல்லாத சூனியம். சக்தியோ தான் என்ற உணர்வு பெற்றது.
இது எப்படி சிவனிடமிருந்து சக்தி பெற முடியும்?
சக்தி என்பதை 1 என்று வைத்துக்
கொள்வோம். சிவமாவது 0 அல்லது
சூன்யம். 1ன்
பின் 0 வைக்
கூட்டிக்கொண்டே போக அதன் அளவு எல்லை கடந்து போகிறது. 100000....000..இப்படி. ஆக, எல்லையில்லாத
சூன்யத்திலிருந்து அளவு கடந்த சக்தியை பெறுகிறாள் சக்தி. அந்த சக்தி நீள அகல உயர
பரிமாணத்தில் இருக்கலாம். அல்லது கால நேர பரிமாணம். அல்லது அளவு கடந்த சக்தி
இப்படி பல பரிமாணங்கள்!
அமெரிக்கா கண்டம் கண்டு பிடித்த புதுதில், ஐரோப்பியர்கள்
தங்களுக்குள் ஒரு விதி வைத்திருந்தாக சொல்வார்கள். காலையில் ஒருவன் குதிரை மேலேறி
சவாரி செய்ய ஆரம்பித்தால், மாலையில்
இருட்டும் வரை அவன் எவ்வளவு தூரம் செல்கிறானோ அந்த மொத்த அளவும் அவனுக்கு சொந்தம்.
அதுவரை அவன் கண்டு கேட்டிராத நிலம், சொத்து அவனுக்கு
சொந்தமாகிறது. இது ஓரளவு சக்தி சிவனைப் பற்றி புரிந்து கொள்ள உதவும் உதாரணம்.
ஆயினும் ஓரளவு அறிவுக்கு எட்டும் இந்த விதி எனக்கு அனுபவ
பூர்வமாக இதுவரை எட்டவே இல்லை! விஞ்சான பார்வையில் கடவுள் இருக்கிறார் என்று
நிரூபிக்கும் முயற்சி இது. ஏன், 1000000... என்பதற்கு பதில் 1111111....
என்றோ
அல்லது 123456789123456789... என்று கூட இருக்கலாமே என்று
கேட்கலாம். அது கணிதத்தின் படி சரியாக கூட தோன்றலாம். ஆனால் சூன்யத்தின் எல்லையற்ற
தன்மை 1,2 என்று வந்த பிறகு நிச்சயம் குறைய ஆரம்பிக்க வேண்டும்.
அது, நமக்கு
தெரிந்த கணிதத்தினால் விவரிக்க முடியாமல் இருக்க வேண்டும்.
ஒருவர் சமாதி நிலை அடைகிறார் என்பது அவர் தன்னிலை இழந்து
நீண்டு பரந்த சூன்யத்திற்குள் நுழைகிறார் என்பதே என்பது என் கணிப்பு.
There is this dialogue
exchange that there is no Sakthi (Energy) without Siva (boundless nothingness)
and there is no Siva without Sakthi. Siva being boundless nothingness, how can
Sakthi an entity in itself derive more power from Siva?
Take Sakthi as 1. Siva is
0, that is soonya or nothingness. When you add zeroes after 1, for example,
10000000....00000...., the value increases tremendously. Thus, from boundless
nothingness, Sakthi derives immeasurable power. It could be in the dimension of
length breadth and height, or in time scale or it could be in the amount of
energy. It could have different dimensions!
I used to hear that when
America was discovered, there used to be a system
that if a man started riding a horse after sunrise, the land he covers by
riding the horse till sunset used to become his. Thus a man owns the land and
wealth he has not seen or heard before. This sort of helps us to understand the
mammoth Sivasakthi.
This is a sort of an
attempt to explain the existence of God to those in Science. Though I am able
to understand the principle, I am not able to experience the same within me so
far. One may ask why even 111111111111......... or 123456789123456789....
..... can also run endlessly, but, the boundlessness of nothingness must be getting reduced once it becomes 1,2,3, like that, and the mathematics of today may not be able to explain it so far.
..... can also run endlessly, but, the boundlessness of nothingness must be getting reduced once it becomes 1,2,3, like that, and the mathematics of today may not be able to explain it so far.
My
guess is that, when one attains Samadhi, one loses his self identity and mixes
with the vast nothingness around.